விழுந்துடாத... அப்பவே சொன்னேன் இடிச்சுக்குவ என்று... இப்போ பாத்தியா....
எல்லாத்தையும் பெஸ்ட்டா இருக்கணும் பா... இல்லன்னா வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவாய்...
இப்படி பிள்ளைகளை எச்சரிக்க ஆரம்பிக்கும் பெற்றோர்கள் பலர் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்பட அப்பா போல தன் பிள்ளைகளை தன் கைக்குள்ளேயே வைத்து வளர்க்க துடிக்கிறார்கள் பலர்.
சென்னை வாசிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். அவர்கள் சென்னையில் நல்ல கல்வி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். சென்னையில் மட்டும் தான் நல்ல கல்வி கிடைக்கும் என்று முழுமையாய் பலர் நம்புகிறார்கள்.
நம்ம ஊர்ல எல்லாம் கல்வித்தரம் சரி இருக்காது சென்னைக்கு வந்து விடு என்கிறார்கள். கூடவே பல்வேறு ஆக்டிவிட்டிர்களில் பிள்ளைகளை களம் இறக்குகிறார்கள்.
தன் பிள்ளைகள் சூப்பர் மேன் போலவும், பேட்மேன் போலவும், சூப்பர் உமன்கள் போலவும், பென்டாஸ்டிக் போர் போலவும் இருக்க வேண்டும் என்று விரும்பி.
பிள்ளைகள் பள்ளி முடிந்தவுடன் யோகாசனம் கராத்தே சிலம்பம் இசை பயிற்சிகள் ஹிந்தி ஸ்பீக்கிங் அபாகஸ் கலி கிராபி ஓவியம் வரைதல் அது இது என்று பிள்ளைகளுக்கு பித்து பிடிக்க வைத்து விடுகிறார்கள் சில பெற்றோர்கள். எனக்கு தெரிந்து ஒரு சில பிள்ளைகள் நான்கு ஐந்து பயிற்சிகள் வரை ஒரு நாள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்குப் பெரும் காரணம் பெற்றோர்கள் இருவருமே பணிக்கு செல்வது அவர்கள் வீட்டுக்கு வருவதற்கு எட்டு மணி ஆகி விடுகிறது. அது வரை பிள்ளைகள் ஒவ்வொரு பயிற்சி நடக்கும் இடங்களுக்கும் சென்று இருப்பார்கள். வரும்போது எல்லோரும் சேர்ந்து வருவதற்கு அது வசதியாக போய்விடும்.
தங்களது உணவை தங்கள் ருசித்து பார்க்கும் வயதில் பிள்ளைகள் தெரிவு செய்தலையும் துவங்கி விடுகிறார்கள். பிறகு கல்வியிலும் அவர்கள் தெரிவு இருக்கிறது, சில பாடங்களில் அவர்கள் பிடித்த வண்ணம் ஆகிறது சில பாடங்கள் அவருக்கு சலிப்பூட்டும் வண்ணம் போகிறது..
ஆசிரியர்களை பொருத்தும் பாடமும் பிடித்தும் பிடிக்காமல் போய்விடுவதும் உண்டு.
அதேபோல பெற்றோர்களின் நடத்தலை பொறுத்த விதத்தில் பெற்றோர்களும் சில பிள்ளைகளுக்கு பிடித்தும் பிடிக்காமலும் போகும் அபாயமும் உண்டு.
பிள்ளைகள் எது செய்தாலும் இப்படி செய்யாதே அப்படி செய்யாதே என்று தடை போடும் பெற்றோர்கள் பலர் இருக்கும் அதே வேளையில் இப்படிச் இப்படி செய், நீ இதுபோல செய்து பாரேன் என்று வழிகாட்டும் பெற்றவர்கள் தான் சிறுவர் சிறுமியருக்கு தேவைப்படுகிறது.
அதே வேளையில் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆக தன் பிள்ளை எது செய்தாலும் அதை பாராட்டுவதும் சீரான வழியாக இருக்குமா என்பது சந்தேகமே.
தன் பிள்ளைகள் சக பிள்ளைகளை விட முதன்மையாய் இருக்க வேண்டும் என்பது இயல்பான பெற்றோரின் விருப்பம் தான். அதற்காக 100CC பைக்குகளை 25O CC பைக் களின் வேகத்திற்கு முறுக்கி கொண்டு இருந்தால் ஆக்சிலேட்டர் அந்து போகும்..
இதில் பெரும்பாலும் பிரச்சனை என்னவென்றால் இயல்பாக வாழ்க்கையை வாழ விரும்பும் பெற்றோர்களுக்கு பெரும் மன உளைச்சலை இந்த சூப்பர் பெற்றோர்கள் தந்து விடுகிறார்கள்.
தொடர்ந்து தங்கள் பிள்ளைகள் செய்வதற்கு மேலாக அவர்களை பாராட்டி என் பிள்ளை எல்லாத்தையும் டாப்பில் வருவான் என்று சொல்வதும் என் பிள்ளை மொபைல் ஃபோனை எடுத்தால் அவனாக யூடியூபை ஓபன் செய்து எல்லா வீடியோவையும் பார்த்து விடுவான் அவனுக்கு மொபைல் போனில் எல்லாம் தெரியும் என்ற பெருமை பீற்றிக்கொள்வதும், 10, 12 வயதிலேயே பிள்ளைகளுக்கு ஸ்கூட்டி ஓட்டுற கற்றுக் கொடுப்பதும் பைக்குகளை ஓட்ட சொல்லிக் கொடுப்பதும், பைக் ரேஸில் பயன்படுத்தப்படும் பைக்குகளை வாங்கி கல்லூரிக்கு சென்று வர கொடுப்பதும், எல்லாவற்றிலும் என் பிள்ளை முன்பாக இருக்க வேண்டும் என்று இரண்டாம் மூன்றாம் நிலைக்கு வந்தாலே தங்கள் கௌரவமே போய்விட்டதாக என்னை கதறும் பெற்றோர்கள் "நல்ல கல்வி பல்வேறு எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் இங்கு தான் கிடைக்கும் என்று சொல்லிய" சென்னையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி என்றால் நாம் படிக்கின்ற காலத்தில் இத்தகைய பெரும் போட்டி இல்லாமல் நல்லா படிப்பா அவனைப் பாரு அவன் எல்லாம் நல்ல மார்க் வாங்குறான் நல்லவா என்று சாதாரண ஒப்பீடுகளையும் கூட பெரிதாக எண்ணி, மத்த பிள்ளைகளோட கம்பேர் பண்ணாதீங்க என்று அந்த காலத்திலேயே சொல்லும் பெரியவர்கள் எல்லாம் இப்போது எங்கே.?
இன்று கம்பேர் பண்ணாமல் எந்த பெற்றோர்களாவது இருக்கிறார்கள் என்றால் அது விதிவிலக்காக சிலர் மிளிர்கிறார்கள். அது பிள்ளைகளுக்கு கிடைத்த வரமே.!
நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் முதல் ஐந்து மதிப்பெண்களுக்குள் எடுத்தவர்களையும் கண்டு இருக்கிறேன் ஆவேராஜா படித்தவர்களையும் கவனித்திருக்கிறேன் ஒன்றுமே சரியா படிக்காமல் மூட்டை கணக்கில் அரியர் வைத்தவர்களையும் கவனித்து உள்ளேன்..
நன்றாக டாப்பில் first class with honours ல வந்தவர்கள் ஒரு கம்பெனியில் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சாதாரணமாக படித்தவர்கள் கம்பெனிகளை துவங்கி முதலாளியாக இருக்கிறார்கள்.
அரியர் வைத்தவர்கள் சிலர் எப்படியோ தத்தளித்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆவரேஜாக படித்தவர்களின் மீது தான் நம்முடைய கவனம் இப்பொழுது செல்ல வேண்டும்.
அவர்கள்தான் வாழ்க்கையின் வெற்றியையும் தோல்வியையும் நன்கு ருசி பார்த்தவர்கள். எல்லாம் என் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று கருதும் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோர்களாக நிச்சயம் இருந்திருக்க முடியாது என்று கருதுகிறேன்.
இவ்வளவுதான்பா நம்மால் முடியும் எனும் பெற்றோர்களின் பிள்ளைகள் தான் அவர்கள் பெரும்பாலும். குறைவுகளை தங்கள் வாழ்வில் அனுமதிக்க கற்றுத் தெரிந்தவர்கள். தன்னைவிட மேலானவர்களையும் கீழானவர்களையும் பார்த்து கற்றுக் கொண்டவர்கள்.
அவர்கள் தான் தொடர்ந்து வாழ்க்கையில் ஏற்றமாக இருந்தாலும் சரி இரக்கமாக இருந்தாலும் சரி மொத்தமாக முன்னேறிக் கொண்டே இருப்பவர்கள்.!!
எனவே தடை போடும் பெற்றோர்களாக நாம் இருந்து விட வேண்டாம், அதைவிட அதிகமாக விழுந்து விழுந்து எல்லா பாதைகளையும் செவ்வைப் படுத்தி தன் பிள்ளைகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்து இருக்கும் பெற்றோர்களாகவும் இருக்க வேண்டாம்,
மாறாக...
அவர்கள் நடந்து செல்லும் பக்கத்திற்கு வெளிச்சமாக இருந்து இது நமக்கான பாதையா இல்லையா என்பதை அவர்கள் தெரிவு செய்ய ஒரு உதவியாக இருந்தாலே நிச்சயமாக பிள்ளைகள் நாம் நினைத்ததை விட முன்னேறி வந்து வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்.!!
அன்புடன்
🌸பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக