முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்வின் பொருள்.!?

சமீபத்திய இடுகைகள்

நிலைக்க.. நீடிக்க..!

ரோபோ அரசாங்கமும் நம்முடைய நிலைமையும்

ரோபோ அரசாங்கமும் நம்முடைய நிலைமையும் //கற்பனை ஆக்கம் : பூங்குன்றன்// ..... ரோபோ : (கனிவான குரலில்) நெக்ஸ்ட்..! பயனாளி : நான் தாங்க.. வணக்கம்..  ரோபோ : வணக்கம். உங்களுக்கு நான் எப்படி உதவ முடியும். பயனாளி : கேள்வியே தப்பு. என்ன உதவி பண்ணனும்னு கேளு ரோபோ : அவசியம் இல்லாத பதில், என்ன விஷயமா வந்து இருக்கீங்க  பயனாளி : (ரோபோவை முறைத்துக் கொண்டு) வருமானச் சான்றிதழ் வேணும்  ரோபோ: கண்ண காட்டு போதும்..  விவரத்தை நானே சொல்றேன்  பயனாளி : நல்ல பாட்டா இருக்கே. ரிங்டோன் எடுத்துக்கவா  ரோபோ: யோவ்.. கண்ண காமிய்யா ஸ்கேன் பண்ணிக்கிறேன். பயனாளி : அப்படி விவரமா சொல்லு,  ரோபோ: வருமானச் சான்றிதழ் மட்டும் போதுமா  பயனாளி : ஆமா, பிரிண்ட் போடு எடுத்துட்டு போறேன்  ரோபோ: ஆமா உன் வருமானம் வருஷத்துக்கு எவ்வளவு  பயனாளி :  கூலி வேலையின் மூலம் வருட வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என்று போட்டுக் கொடு  ரோபோ: எதே.. 72,000 ரூபாயா.. வருடத்துக்கா.. பயனாளி : ஆமா போன வருஷம் எங்க ஊர்ல அப்படித்தான் வாங்கினேன்.. இந்த வருஷம் தான் எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஆகிட்டாங்க... ரோபோ: என...

என்னத்த சொல்ல

கடல் பார்த்து அழுதவன்.!

கடல் பார்த்து அழுதவன்.! கடல் அவனுக்கு பிடிக்காத ஒன்று. கடல் என்றாலே உப்பு தண்ணீரும் அலைகளின் இரைச்சலும் ஆங்காங்கே மீன்களின் நாற்றமும் நினைவுக்கு வரும். போதாத குறைக்கு சுனாமி வேறு.  எனவே கடல் பொதுவாகவே அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது.! ஆனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவன் கடற்கரையில் அமர்ந்திருந்தான்.  அதுவரை பிடிக்காத கடல் அவனை ஏதோ ஒரு விதத்தில் அவனை இன்று வரவழைத்து விட்டது.! கடல் பெரியதுதான். தன்னைப் பிடித்த பிடிக்காத மனிதர்களை விட ரொம்ப பெரியது. வந்து விடுகிறாயா உன்னையும் சேர்த்துக் கொள்கிறேன் என்பது போன்று ஒவ்வொரு அலைகளும் அவனை நோக்கிய வருவதும் பிறகு அவனின் மௌனம் கண்டு ஏமாந்து தலை கவிழ்ந்து செல்வதுமாக இருந்தது.! ஆனாலும் அலைகள் ஓய்ந்தபாடில்லை.! அலைகளின் குணமே அதுதானே.  உன்னோடு வாழ்வதற்கு எங்கேயாவது போய் செத்து விடலாம் என்று அவள் சொன்னதுதான் மீண்டும் மீண்டும் அவன் புத்திக்கு வந்தது.  ஒவ்வொரு அலைகளின் போதும் அவள் சொன்ன வார்த்தைகள் தான் அவனுக்கு நினைவுக்கு வருகிறது.  பிறகு அலைகள் பின்னோக்கி செல்லும்போது அவன் அதை மறக்க நினைக்கிறான் ஆனாலும் வேறு ஒரு அலை அதைவிட பெர...

தலைப்பு எதுக்கு இதுக்கு?

மீண்டும் ரெட் சிக்னல்.. தனது காலில் உள்ள அழுக்கடைந்த கட்டு போட்ட பான்டேஜுடன் வயதான பெண்மணி நின்றுகொண்டுள்ள வாகனத்தின் இடையே புகுந்து கையேந்திக்கொண்டு தன் காலை இழுத்து இழுத்து நடந்தாள். பெரும்பாலான சிலர் அந்த முதியவள் தங்களை வண்டிகளை நெருங்கியதும் அவளை தவிக்க வண்டியை முன்னே நகர்த்திக்கொண்டு இருந்தார்கள்.. அரிதாய் சிலர் சில்லறை கொடுத்தார்கள், அந்த முதியவள் சலாம் வைத்துவிட்டு அடுத்த வண்டிகளை நோக்கி நடக்கையில் சிக்னல் மாறியது.. ஹாரன் சப்தங்கள் காதை கிழிக்க வண்டிகள் பாய்ந்து சென்றன.. அவள் வெயில் அதிகம் ஆகியதால் வழமையாக அமரும் அந்த ஒற்றை மரத்துக்கு அடியே தஞ்சம் புகுந்தாள். தனது தோள் பையில் இருந்து ஒரு பழைய வாட்டர் பாட்டிலை எடுத்தது தண்ணீர் குடித்தாள்,  அன்றும் அந்த நாய் அதை கவனித்துக்கொண்டே இருந்ததால், அவள் அருகே வந்தது..  அவள் அளவோடு கொஞ்சமாய் தண்ணீரை அந்த நாய் குடிக்க அவள் அதுக்காகவே வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் குவளையில் ஊற்றினாள். வறண்ட நாவில் நீர் பட்ட நேரத்தில் நாயின் உயிர் மீண்டு நின்றது.  அந்த குவளையில் உள்ளே உள்ள ஈரப்பதத்தை தன் நாக்கினால் நக்கியது, அதை கவனித்த அந்த முதிய...