இன்னைக்கு எங்க ஆபீசில் சாப்பிடும் நேரத்தில் பேசிகிட்டு இருந்தப்போ, இப்போ உள்ள குடும்பங்கள் எல்லாம் ரொம்ப பிரிஞ்சி கிடக்குது என்று பேச்சு எங்கெங்கோ ஆரம்பிச்சு எங்கெங்கோ போயி முடிஞ்சிது.. அவரவர் அவரவர் குடும்ப பழைய நினைவுகளை பேச... என்னவோ திடீர்னு எனக்கு கொண்ணைக்காடு பெரியம்மா வீடு நினைவுக்கு வர அதை அவங்ககிட்ட சொன்னேன்... (எனது மனதில் பட்டது இவை.. வேறுபட்ட கருத்துக்கள் கூட சிலருக்கு இருக்கலாம், ஆனால்.. பெரிதாக வித்யாசம் இருக்காது என்று எண்ணுகிறேன்.) அதை இங்கே நான் பகிர்வது ஒரு மீள் நினைவலைகளாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.. கொண்ணைக்காடு, மாவடிக்கோட்டை.. அதிகம் நான் முழு ஆண்டு விடுமுறைக்கு போன பெரியம்மாக்கள் ஊர் இவைகள் தான். கொண்ணைக்காடு பெரியம்மா... அம்மாவுக்கு மூத்த அக்காள் என்பதால், எனது பல பெரியம்மாக்களும் அங்கு சேர்ந்து சென்று முழு ஆண்டு விடுமுறை காலத்தை கழிப்பது (கொண்டாடுவது என்பதே சரியாக இருக்கும்) உண்டு.. வயல், வரப்பு, கால்வாய், தரையில் படர்ந்து கிடைக்கும் மாமரங்கள், பச்சரிசி மாங்காய், தென்னை தோப்பு, குமட்டிக்காய், எள், நிலக்கடலை, தட்டப்பயிர் என பொன் விளையும் பூமியாக ஆத்...