திருமண வாழ்க்கை கடினமானால் பிரிந்துவிடுவது சிறந்ததா..? "இல்லம்மா.. இனியும் நீ அந்த கொடுமைக்காரன் கிட்ட கஷ்ட்டப்பட்டு வாழ வேண்டாம், பிரிந்து வந்திடு, விவாகரத்து வாங்கிட்டு உன் வழியை பார்த்துகிட்டு போயிடு" "இப்படி ஒருத்திகூட நீ இனிமேல் குடும்பம் நடத்தினால், உன்னையும் கொன்னுட்டு பிள்ளைகளையும் கொன்னுட்டு போயிடுவா அவ, இந்த பாவி சிறுக்கியோட இனி வாழ்க்கை என்ன, விவாகரத்து வாங்கிட்டு அடுத்து என்னன்னு பாரு" ஒரு ஆணோ, பெண்ணோ... அவரது குடும்பம், உறவுகள், நட்புகள் எல்லோரிடமும் அன்பானவன்/ அன்பானவள், கண்ணியம் மிக்கவள்/ மிக்கவன், நல்ல குணமுள்ளவர்கள், பொறுப்புள்ளவர்கள் என மிக நல்ல பெயர் எடுக்கிறார்கள், அதே வேளையில் தனது கணவன் அல்லது மனைவியிடம் சிலரோ மிக வெறுப்பான நிலையை சம்பாதிக்கிறார்கள். எப்படி இது உண்டாகிறது? எல்லோருக்கும் நல்லவராக, குணவான்களாக, குணவதிகளாக இருக்கும் ஒருவர் திருமண பந்தத்தில் சிக்கல் உள்ள மோசமான நபராக எப்படி ஆகிவிடுகிறார் என்பது பெரிய உளவியல் சிக்கலான ஒன்றாக உள்ளது. அதை விடுத்து, இந்த சிக்கல்கள் விவாகரத்தில் கொண்டுவந்து விடுகிறது.. விவகாரத்த்தும் ஆகிவிடுகிறது.. ...