முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமண வாழ்க்கை கடினமானால் பிரிந்துவிடுவது சிறந்ததா..?

 திருமண வாழ்க்கை கடினமானால் பிரிந்துவிடுவது சிறந்ததா..?


"இல்லம்மா.. இனியும் நீ அந்த கொடுமைக்காரன் கிட்ட கஷ்ட்டப்பட்டு வாழ வேண்டாம், பிரிந்து வந்திடு, விவாகரத்து வாங்கிட்டு உன் வழியை பார்த்துகிட்டு போயிடு"


"இப்படி ஒருத்திகூட நீ இனிமேல் குடும்பம் நடத்தினால், உன்னையும் கொன்னுட்டு பிள்ளைகளையும் கொன்னுட்டு போயிடுவா அவ, இந்த பாவி சிறுக்கியோட இனி வாழ்க்கை என்ன, விவாகரத்து வாங்கிட்டு அடுத்து என்னன்னு பாரு"


ஒரு ஆணோ, பெண்ணோ... அவரது குடும்பம்,  உறவுகள்,   நட்புகள் எல்லோரிடமும் அன்பானவன்/ அன்பானவள், கண்ணியம் மிக்கவள்/ மிக்கவன், நல்ல குணமுள்ளவர்கள், பொறுப்புள்ளவர்கள் என மிக நல்ல பெயர் எடுக்கிறார்கள், அதே வேளையில் தனது கணவன் அல்லது மனைவியிடம் சிலரோ மிக வெறுப்பான நிலையை சம்பாதிக்கிறார்கள்.


எப்படி இது உண்டாகிறது? எல்லோருக்கும் நல்லவராக, குணவான்களாக, குணவதிகளாக இருக்கும் ஒருவர் திருமண பந்தத்தில் சிக்கல் உள்ள மோசமான நபராக எப்படி ஆகிவிடுகிறார் என்பது பெரிய உளவியல் சிக்கலான ஒன்றாக உள்ளது.


அதை விடுத்து, இந்த சிக்கல்கள் விவாகரத்தில் கொண்டுவந்து விடுகிறது.. விவகாரத்த்தும் ஆகிவிடுகிறது..


அடுத்து....


எல்லாம் திட்டமிட்டபடிதான் அடுத்த வாழ்வு உடனே அமைந்து விடுகிறதா? அமைந்தால் ரொம்ப நல்லது.. ஆனால்.. 

பலருக்கு அதில் இருந்து அடுத்த சிக்கல் துவங்குகிறதாக இருக்கிறது..!


எனக்கு தெரிந்த ஒருவரின் வாழ்வு இப்போது விவகாரத்து கிடைத்து தனது அடுத்த  திருமணம் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகும் முன்பாகவே அவருக்கு  திருமணம் செய்துவிட நினைத்து பெண் பார்க்க துரிதம் காட்டினார்கள். வருடங்கள் ஓடிவிட்டது. வயதும் கூட கூட மிச்சமிருக்கும் வாழ்வின் காலங்கள் குறைந்து கொண்டே வருகிறது.


இன்று வரை... பெண் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.! பலருக்கு இலகுவாய் அமைந்துவிடும் இரண்டாவது வாழ்வு சிலருக்கு உள்ளத்தில் புற்றாக ஆக்கும் கொடும் உளைச்சலுக்கு தள்ளிவிடுகிறது.!


நிற்க, 

விவாகரத்து பெற்ற எல்லோருக்குமே முந்தைய வாழ்வு நரகமாக இருந்ததா, அவ்வளவு கொடுமைகளா, தீர்க்க இயலா பிரச்சினைகளா என்று பார்த்தால் அப்படி எல்லோருக்கும் இல்லை என்றுதான் தெரிகிறது.


அதே வேளையில் இதைவிட பன்மடங்கு  நரகமாக தெரியும் வாழ்க்கையை, உச்சபச்ச கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையை, தங்களின் விட்டுக்கொடுக்கும் அல்லது புரிதலின் அமைதிகாக்கும்  சில அணுகுமுறையால், அன்பை தொடர்ந்து வெளிப்படுத்திய செயல்களால் தங்கள் வாழ்க்கையை சீராக்கி நிம்மதியின் பாதையில் சென்றவர்களும் இருப்பது கண்கூடு .


எல்லோருக்கும் இது சாத்தியமா தெரியவில்லை . ஆனால் இந்த வாழ்க்கை சரிவராது இனி, அடுத்த வாழ்க்கைக்கு போயிடலாம் எனும் முடிவை எடுக்கும் பலருக்கும் அடுத்த வாழ்வு தயாராக இருந்தால் அது அவர்களுக்கு வழியாக அமையும், இல்லையேல் காலம் தரும் வலியாக அமையவும் வாய்ப்பு உண்டு.


கடினமான வாழ்வியல் சூழலுக்கு பிரிவுதான் முடிவு என்பது ஏற்புடையது. ஆமாம், கடின நெருப்பில் தினமும் மனம் வெந்து வாழ்வதை காட்டிலும் அதை விட்டு நீங்குவதே நல்லதுதானே.


ஆனால், அந்த கடினத்தின் அளவீடாக எது இருக்கிறது என்பதுதான் அது கடினமாகவே இருக்குமா அல்லது இளகும் தன்மை உண்டா என்பதை தீர்மானிக்கிறது. 


கொஞ்சம் சீராய்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கைதான் பலரிடத்திலும் உண்டு. விட்டுக்கொடுப்பது என்பது தங்கள் உரிமை பறிப்பு என எண்ணுவது உலக அறிவு, எனக்கான சக உயிருக்கு என கனிவை காட்ட என்னால் முடியும் என இடம் கொடுப்பது அன்பு சார்ந்த முடிவு.


ஏனெனில்.. எனது வயது அனுபவத்தில், இரண்டாவது திருமணம் ஆகிய சிலரின் அனுபவங்களை கொண்டு நோக்கும்போது அந்த வாய்ப்பும் கடினமாக இருக்கிறது, இதை விட்டுவிட்டால் என்னாவது எனும் இறுக்கமான சூழலுக்குள் தள்ளுகிறது.


இருப்பதை முடிந்தவரை அன்போடு நகர்த்த முடியும் என்றால் அதை சிறந்ததாகவும் ஆக்கிட முடியும்.! பின்னான தெரியாத வருத்தமோ சந்தோஷமோ அதை கற்பனை கட்டிக்கொண்டு இருப்பதை கூடுதல் சிக்கல் ஆக்கி பிரிவது நல்ல முடிவாக பலருக்கு இல்லை என்பதை என்னளவில் கண்டறிந்த ஒன்று.!!


அன்புடன் 

பூங்குன்றன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...