முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எது பாரம்..!

மண்ணும் மலையும் எங்கள் இனமே கண்ணும் கருத்தாய் காத்துவந்தோமே அல்லும் பகலும் அயர உழைத்தோமே நெல்லும் பயிரும் உயிர் தழைத்திடுமே வேண்டாத விலங்கினம் புகுந்த நிலம்போல் கூண்டாக புகுந்த கலப்பின புல்லுருவிகளால்    ஆண்டாண்டு காலமாய் ஆண்டுவந்த இனம் மாண்டு போகும் நிலை வந்ததேயதினால் யானை கொண்டு நெற் போரடித்தொமே தங்கம் தவழ அணிந்து மகிந்தோமே காயும் பயிற்கொய்ய அமரும் கோழியை விரட்ட வீசியது தங்க மாலைதானே எங்கே மறைந்தது அந்த பெருஞ்செல்வம் இன்றும் திருபாதே போனதோ அந்நாளும் மாண்டார் திரும்பி வந்தாலும் இங்கு என்னிலை கண்டு திகைப்பாரே அங்கு காய்ந்தது பயிரல்ல வறுமையின் வயிறு வெந்தது சோற்றுக்காக வெண்ணிற பாதம் முக்கிய மூட்டைகள் ஏற்றிய தலையும் மூத்தகுடிக்கு என்றாவது தன்னிலை புரியும் அன்றோடு விடியும்..! அல்லல்கள் அகலும்..!! -      *பூங்குன்றன்*

வாழ்தல் என்பதன் பொருள்

பிரபஞ்சம் தனக்கே சொந்தம் என்ற மாய வலையில் மாந்தர் இனம் விழுந்து கிடக்கிறதொ எனும் ஐயம் எழும் காலம் இது. வாழ்தல் என்பதன் பொருள் எல்லா உயிகளையும் உள்ளடக்கியதே. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றதையும்.. “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்” என்றதையும் எட்டு சுரைக்காயாய் எண்ணிய மாந்தரின் நாகரீகம் எனும் மாய வளர்ச்சியின் விளைவுகளை இங்குள்ள பேசும் படங்களில் காண்கிறேன். தன் பயன்பாடு பற்றி சிந்திக்கும் மனித இனம் தன் சூழல் குறித்த பயன்பாடு, பாதுகாப்பு பற்றி இனியேனும் சற்று துரிதமாய் சிந்திக்க விழைந்தால் உயிர்களின் அழிவு தள்ளிப்போடப்படும். பூமிக்கும் சற்று நிம்மதி பிறக்கும். முக்கியமாக மக்காத நெகிழி ( Plastic) பற்றிய சிந்தனை உரக்க பரவ வேண்டிய தருணம் இது. நெகிழி சாதாரணமாக அழியாது. அதே சமயம் உயிர்களை இலகுவாக அழிக்கிறதை இந்த பேசும் படங்கள் ஐயம் அகல காட்டுகிறது. பயன்படுத்துவதோடு நின்று விடாது, அதை பொறுப்புடன் அப்புறப்படுத்துவதிலும் நாம் கவனம் கொள்ளல் வேண்டும். அதன் பின் நாம் நிச்சயமாக நெகிழி...

மனம் புதிதாகட்டும்

‘நீ என்னதான் சொல்லு.. நாம நம்ம இடத்துல இருக்கதுதான் சுதந்திரம், இப்டி நாலு சுவத்துக்குள்ள சுத்திகிட்டு இருக்குறது, ரெண்டு வேளை சாப்பாடு.. யப்பா இது என்ன வாழ்க்கை’ ‘ம்ம்.. உனக்கென்ன.. நல்லா பேசுவ.. எங்கயோ இருந்த நம்மள கூட்டியாந்து, வீட்டுல நமக்குன்னு தனி இடம் குடுத்து, சாப்பாடு கொடுத்து காப்பத்துறாங்க பாரு.. நீ இதுவும் பேசுவ.. இன்னமும் பேசுவ..’ ‘அடேங்கப்பா.. நீ ஓவராதான் இந்த வீட்டுகாரங்களுக்கு ஜால்ரா அடிக்குற, உனக்கு உண்மையில் சுதந்திரமா வாழ மனசே இல்லையா’ ‘மனசு என்னவோ இருக்குதான். ஆனா எல்லாம் நாம நெனச்சா நடக்குதா.. நம்மள பார்த்தா அவங்களுக்கு மனசு ரிலாக்ஸ் ஆகுமாம். நம்ம மனசு அவங்களுக்கு புரியுமா என்ன.? நாம யாரால கட்டுப்படுத்தப்படுறோம், நாம நினச்சா நினச்ச இடத்துக்கு போய்டத்தான் முடியுமா? எல்லாம் நம்ம பிறவியால் வந்தது.. கொஞ்சம் கலரா, அழகா இருந்ததால வந்த வினை’ ‘அட ஆமாப்பே. என்ன அழகா இருந்து என்ன புண்ணியம்.. வீட்டில் உள்ளவங்க, அப்புறம் இங்க வர்றவங்க போறவங்க எல்லோருக்கும் காட்சிப்பொருளா நம்ம வாழ்க்கை ஆகிட்டு. நாம நெனச்சாலும் மாத்த முடியல’ ‘அதாம்பா வருத்...

கவிதைபித்து

“ சா ர் ..  வேற வழி இல்ல சார் ..” “ ஆனால் இதை உள்ளம் ஏற்க மறுக்கிறதே ..  தாளாது  .. தாளாது .. ”   “ சார் ..  தமிழ்ல என்னை கொல்றீங்க ..  நீங்க வேணுன்னா தமிழ் பண்டிதரா இருக்கலாம் .  ஆனா அவன் இந்த கல்லூரி பிரின்சிபால் மகன் ,  நாம  பிரின்சிபால என் பகைச்சுக்கணும் ..  புரிஞ்சுக்குங்க ..  பேசாம கவிதை போட்டிக்கு அவன் விரும்புற மாதிரி அவன் பெயரையும் சேர்த்துக்குங்க .. ”  என்று கெஞ்சினார்   பியூன் . தமிழ் பேராசிரியர் தமிழ்மகன் தன் முகத்தை இரு கரங்களாலும் துடைத்துக்கொண்டார் ,  அண்ணார்ந்து விட்டத்தைப்  பார்த்தவாறே .. “ எம் தாய்மொழிக்கு இது சோதனை ..  அவன் எழுதிய கவிதைகளை நாம் கேட்டால் வேதனை ” “ இது என்ன ரோதனை ”  என பியூன் மனதினுள் முனகிக்கொண்டார் .. “ சரி ..  நீர் சொல்லுகிறபடி அவன் பெயரை சேர்க்கலாம் ..  இல்லையெனில் முதல்வர் முறைத்துக்கொண்டே இந்த ஆண்டுமுழுவதும் கல் லூரியில் கசப்பை உமிழ்வார் .. ”  என்றார் தமிழ்மகன் . “ சார் ..  அவரு உமிழ்ந்தாகூட தொலையுதுன்னு போகல...

மறந்துபோன போபால் நினைவுகள்.. – ஒரு சாமானியனின் குரல்..

    எனக்கு அப்பொழுது இரண்டு வயது. விவரம் அறியா வயதில் நான் வீட்டினுள் உறங்கிப்போன   அதே நேரத்தில் என் தேசத்தின் மற்றுமொரு பகுதியில் எனக்கொத்த வயதுடைய எனது சகோதர சகோதரரிகள் விசவாயு கசிந்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் அடங்கிப்போனது அப்பொழுது எனக்கு தெரியாது. பல ஆண்டுகளாக போபால் விசவாயு பற்றி பேசிவருவதை நான் விவரம் அறியும் வயதுகளில் துவங்கி தற்காலம் வரை கேட்க முடிகிறது. கேட்க மட்டும்தான் முடிகிறது. இன்று அதைப்பற்றி நானே இங்கு மனதில் உள்ளவற்றை பகிர்வேன் என்பது நேற்றுவரை நானறியேன். வாகனங்களுக்கு பிரேக் எதற்கு என்று கேட்கையில் பலரின் பதில் வாகனத்தை நிறுத்துவதற்கு என்பதாக இருக்கும். ஒருசிலர் அது பாதுகாப்பிற்கு என்பார்கள். வெகுசிலர் வாகனத்தை வேகமாக இயக்கவேண்டுமெனில் பிரேக் அவசியம் என்பார்கள். இதுவும் சரிதானே. அறிவியல் வளர்ச்சியும் அப்படி பல்வேறுபட்ட கருத்து வளங்களைக் கொண்டதுதான். அதில் ஒன்றாக வந்ததுதானே அந்த பூச்சுகொல்லி தொழிற்சாலை. அந்த தொழிற்சாலையில் பணியில் இருந்தவர்களுக்கு சிறப்பான எதிகாலம் நமக்குண்டு என்ற எண்ணம் இருந்திருக்கும். அழியாநிலை பஞ்சுமில்லில் பணி...