பிரபஞ்சம் தனக்கே சொந்தம் என்ற மாய வலையில்
மாந்தர் இனம் விழுந்து கிடக்கிறதொ எனும் ஐயம் எழும் காலம் இது. வாழ்தல் என்பதன்
பொருள் எல்லா உயிகளையும் உள்ளடக்கியதே.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றதையும்..
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்”
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்”
என்றதையும் எட்டு சுரைக்காயாய் எண்ணிய மாந்தரின்
நாகரீகம் எனும் மாய வளர்ச்சியின் விளைவுகளை இங்குள்ள பேசும் படங்களில் காண்கிறேன்.
தன் பயன்பாடு பற்றி சிந்திக்கும் மனித இனம் தன்
சூழல் குறித்த பயன்பாடு, பாதுகாப்பு பற்றி இனியேனும் சற்று துரிதமாய் சிந்திக்க விழைந்தால்
உயிர்களின் அழிவு தள்ளிப்போடப்படும். பூமிக்கும் சற்று நிம்மதி பிறக்கும்.
முக்கியமாக மக்காத நெகிழி (Plastic) பற்றிய சிந்தனை உரக்க
பரவ வேண்டிய தருணம் இது. நெகிழி சாதாரணமாக அழியாது. அதே சமயம் உயிர்களை இலகுவாக
அழிக்கிறதை இந்த பேசும் படங்கள் ஐயம் அகல காட்டுகிறது.
பயன்படுத்துவதோடு நின்று விடாது, அதை
பொறுப்புடன் அப்புறப்படுத்துவதிலும் நாம் கவனம் கொள்ளல் வேண்டும். அதன் பின் நாம்
நிச்சயமாக நெகிழிக்கன மாற்று வழிகளை கையாண்டு சற்றேனும் உயிர்களை (நம்மையும்
சேர்த்துதான்) காக்க முயலவேண்டும்.
ஆறறிவு என்பது அழிக்க அல்ல. அமைதலாய் அனைத்து
உயிர்களுடன் வாழ்ந்து செழிக்கவே.!
பூங்குன்றன்


கருத்துகள்
கருத்துரையிடுக