முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதை தைப்பவர்

அகல சாலையின் ஒருபுறம், நீண்டிருந்த தெருவின் துவக்கத்தில், யாரோ ஒரு புண்ணியவான் வளர்த்துவிட்டுப்போன ஒரு புங்கை மரத்து நிழலில் மாயத்துரை மும்முரமாய் வேளையில் இருந்தான். ஒரு நீண்ட சாக்கு, அதின்மீது எங்கோ கிடைத்த பேனரை மடக்கிபோட்டு அதின்மீது பலகைகட்டையை போட்டு அமர்ந்திருந்தான் மாயத்துரை.. கை லாவகமாய் பின்னல்களை உருவாக்குவதும் பின் முடிசிகளாய் உருவேற்றுதலும் தொடர்ந்து நடந்தேறியது. அவனுக்கு முன்பாய் வரிசையாக சில ஜோடி செருப்புகளும், சில ஜோடியத்தொலைத்த செருப்புகளும் இருந்தன. அது ஒரு சாலையோர கடை என்று சொல்லமுடியாது. இரண்டு நிமிடங்களில் சுருட்டிவிடும் அளவிலே இருந்த சிறு குடைக்குள் அடங்கும் கடை போலத்தான் அது..! ‘பிஞ்சிடுச்சு’ என்று தொப்பென செருப்பை போட்டாள் ஒரு இளம்பெண். ‘மாயத்துரை இருக்கையைவிட்டு சற்று முன்பாக சாய்ந்து எக்கியவாறு அந்த செருப்பை எடுத்து அதை துடைத்தான். பின் அதில் தையலை போட ஆரம்பித்தான். முதலில் சைக்கிள் ஸ்டாண்டில் வரிசையாய் சாய்ந்து விழுந்த சைக்கிள்களைப்போல தையல் உருவாகி, பின் ஐந்து நிமிடங்களில் முடிசச்சுகளுடன் இறுதி இலக்கை அடைந்தது. ‘இந்தாங்கம்மா’ ...

வெந்தபுண்ணில் வெச்ச வெடிகள்..!

ஊருக்கொரு இஞ்சினியரு மலையேறி போனகாலம் முக்குக்கு ரெண்டுபய நிக்கானே மந்திகணக்கா எங்கய்யன் படிக்கலையே நானுந்தேன் அப்படியே மவராசா என்மகனே நீ ஏன் ஆன இஞ்சினியரு.! அரைவயிறு கொரவயிறு எப்பவாச்சும் சுடுசோறு ஆனாலும் செவனேன்னு படிச்சியேடே ஏராசா ஊரென்ன சொன்னாலும் உடும்பாட்டம் படிச்சுபுட்ட அடுத்தென்ன வேலையின்னு கேக்குதடே ஊருசனம்..! வெள்ள மனசுபுள்ள நீ படிச்ச படிப்பெதுவோ காடு கரை வித்த மண்ண கண்ணீரு காசாக்கி வீடு மாடி ரோடு போட நல்லாத்தான் நீ படிச்ச வீடு ஒன்னு பாக்கியிருக்கு அதகாக்க வேலைபாரு..! நல்லவனா நா உன்ன வளர்த்ததுதான் தப்பாச்சோ நீபோன எடம் எல்லாமே தப்பாதான் தெரிஞ்சிச்சோ மவராசா எம்மவனே தப்பிச்சி வந்துடுடே கொலைகார கூட்டத்துல உசுராவது மிஞ்சிடுமே..! போட்ட ரோடு காயுமுன்னே புட்டுகிட்டா உனக்கென்ன ஏறி குளம் தூர்வார அவக வயித்தில் போட்டா உனக்கென்ன மண்ணை கொள்ளை அடிச்சாதான் நீ ஒதுக்கிவந்துபூடு கண்ணெல்லாம் தேடுதப்பா உசிரோட இருக்கியாடே..! தெரியாம உன்னத்தான் தெம்புக்கு படிக்கவச்சேன் வெள்ளந்தி மனசுக்காரா படிச்சியேடே பலபாடம் தப்புகள கண்டுக்காம விட்டுடத...

விபத்துப்பகுதி

அதிகாலை 3: 50 , திருச்சி to சென்னை பரபர சாலை. எந்த பானமும் அருந்தாமல் இயற்கையின் உச்சகட்ட அறிகுறியாய் உறக்கமெனும் போதை மூளையையும் அதின் உணர்வுகளையும் உறங்கவைக்க படாதபாடு படும் நேரமது. மாமண்டூர் கடந்து சென்னையை நோக்கி காரை செவ்வனே ஓட்டிக்கொண்டிருந்தான் பிரபா. Force one கார் அது. முன் இருக்கையில் அவனின் அப்பாவும், பின்புற இருக்கையில் அக்கா, அக்காவின் கணவர் அவரின் இரண்டு குழைந்தைகள், அதின் பின்புற இருக்கைகளில் அவனது தங்கையும் அவரது தோழியும் இருக்க, உஸ்ஸ் என கார் பயணித்து இருந்தது. இரவு நேர பயண களைப்பு தெரிய கூடாது என்பதற்காக வெகுதூரம் செல்லும் லாரிகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும் பின்பு வழிவிட்டும் செல்வது சிலநேரம் வழக்கம். அதுஒரு வேடிக்கையான விடயம், ஓட்டுனர்கள் பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். அதை அறிந்தவனாய் பிரபா எப்போதும்போல சரேலென்று சீராக போய்கொண்டு இருந்தான். ஒரு சோதனைச்சாவடி கடந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தொலைவே இருக்கும். ஒரு பெரிய சாலை வளைவை கடந்துகொண்டிருக்கும் தருணமது. நொடிப்பொழுதில் காரின் முன்சென்ற லாரி பிரேக் போட்டு சட்டென வேகத்தை குறைக்க,...