முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொல்லிய காதலை விட..!

சொல்லிய காதலை விட..! தினந்தோறும் கடந்துபோகிறேன் தார் சாலையிலும் உன் பாதச்சுவடுகளின் தேடல்களிலேயே..! கல்லூரி விடுமுறை. ஒரு நாள் என்றாலும் கசக்கிறது நிமிடங்கள் அத்தனையும்.. பேசியதில்லை ஒருநாளும்.. கூச்சம் பெண்களுக்கு மட்டுமேயான சொத்தா என்ன..? கல்லூரி மரநிழலில் அமரும் ஜோடிகளை நீயும் நானுமாய் நினைத்த கற்பனையிலேயே கரைகிறது காலங்கள், நீ அமரும் இடத்தில் நான்வைத்த ஆவாரம்பூ கொத்துக்களை யார்யாரோ எடுக்கிறார்கள், உனக்குமட்டும் கிடைக்காதோ ஒருநாளும்.. அவர்களால் மட்டுமே முடியும் போலிருக்கிறது மௌனம் உடைத்து காதலிக்க, நினைக்கையில் மௌனமே இங்கு பகை, கடைசி ஆண்டும் அப்படியே, உனக்கும் புரிகிறது, எனக்கும் புரிகிறது பழிவாங்கும் மௌனத்திற்கு புரிதலில்லை.. கண்ணீரை பருகுகிறேன் உள்ளத்தின் மௌனக்கனல் கொதிக்கையில் இன்னும் அனலாக கல்லூரியும், நீயும், மௌனமும்... கடைசி நாளும் அப்படியே, எல்லோரும் எழுதும் உன் ஆட்டோகிராப் டைரியில் எனக்குமட்டும் இடமில்லையோ.. கல்லூரி காலங்கள் முடிந்த பின்னும் சாலைகளில் அலைகிறேன் வெறும் கால்களுடன் உன்பா...

பறவைகளைத் தேடும் கூடுகள்

பறவைகளைத் தேடும் கூடுகள் வாழ்வும் வளமும் எதில் கட்டமைக்கப்படும் என்பதே இங்கு பெரிய தேடலாய் இருக்கிறது. பள்ளத்தூரில் நான் பார்த்து வியந்த வீடுகளின் பிரமாண்டம் பெரிது. நம்ம ஊருகளில் இருக்கும் தெருக்களில் நூறு நூற்றைம்பது வீடுகள் உள்ளது. அதுவே அங்கு இரண்டு அல்லது நான்கு வீடுகளுக்கே போதாது. வீதிகள் ஊரை கிழிக்கும் நேர்க்கோடுகள்.! அத்துணை துல்லிய கட்டமைப்பு. பெரும் திண்ணைகள், இரும்பு போன்ற மரத்தூண்கள், இரண்டடுக்கு கொண்ட ஓட்டு வீடுகள், வெளியே உள்ள திண்ணைக்கு சற்றும் சளைக்காமல் பிரம்மாண்டமாய் வெளிச்சம் நிறைந்த நடு முற்றம், அதில் இருந்து மழைநீர் வெளியேற வழித்துளைகள்.! வீடு நிரம்பிய உறவுகள், மாபெரும் குடும்பப்பறவைகளின் சிறந்த கூடு அது.! ஆம்.. செட்டிநாட்டு வீடுகள் ஒரு பெரும் கூடுகள்தான்.! உறவுகளும் உணர்வுகளும் பிறப்பித்த பிரம்மாண்ட வீடுகள் பல இன்று வெறிச்சோடி கிடக்கின்றன. சந்ததிகள் பல வேறு நாடுகளில் சென்றுவிட, தாத்தா பாட்டிகள் விழுதுகளை இழந்த ஆலமரமாய் தள்ளாடி, வெற்று மனதோடு அந்த நிசப்தம் விழுங்கிய வீடுகளுக்குள் நினைவுகளை சுமந்து கிடக்கின்றனர். பறவைகளைத் தேடும் கூடுக...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...