புதியன புகுத்துதலில் ஏற்பட்ட மாற்றங்களே மனித சமூகத்தின் மாற்றத்திற்கான அத்தாட்சியாக இருந்துவருகிறது. சூழல்களை தனக்கு ஏற்றார்போல மாற்றி அமைத்துகொள்வதில் மானுடத்திற்கு நிகரில்லை. தேடல் மனித குல வாழ்வை உற்சாகமாக மாற்றிவிடுகிறது என்பது மிகையல்ல. ஆனால் மிகையான தேடல்கள் மானுடத்தை ஏதோ ஒரு அசுர குணத்தை நோக்கி உந்தி தள்ளுகிறது. சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் விலங்கின் தொடை எலும்பு போல ஒரு புகைப்படத்தை அந்த கிரகத்தில் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி திரியும் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியது. இது போதாதா..? இது இப்படியே இருக்கட்டும். சற்று அந்தமான் சென்டினல் ( 1771 ல் பிரிட்டிஷ் கம்பெனி இப்பெயரை வைத்தது என்கிறார்கள், சென்டினல் என்றால் காவலாளி என பொருள்) தீவு பக்கம் நடந்ததை பார்க்கும் முன்.. அங்கு சென்று கொல்லப்பட்ட ஜான் ஆலனின் டைரி குறிப்புகளில் இருந்து கிடைத்த ஒரு செய்தி பின்வருமாறு.. மூன்றாவது நாள் அங்கு சென்றபோதே அவருக்கு தனது மரணம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனாலேயே , " நான் சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகாக உள்ளது. அழுகிறேன். இதுதான் ந...