ஆச்சர்யம்தான்..
வானிலை அறிக்கையில் சொல்லியபடியே தூறல் ஆரம்பித்தது..
வெகுதூரத்தில்
எங்கேயோ மண்நோக்கி விழும் சாரல்களில் உரசி ஈரத்துடன் உலாவந்து நம் இதயம்வரை உரசும்
அந்த சில்லென்ற காற்றுக்கு மயங்காத மனமும் உண்டோ..?
இருள்
சூழும் மாலை வேளை.
மீண்டும்
அதே ஈரக்காற்று. வீடு நோக்கி செல்லும் நிறைமதி தன் கையிலுள்ள கல்லூரி புத்தகங்களை
சற்று இறுகவே அணைத்துக்கொண்டாள்.
“இப்பவே
குளிருதுல்ல” என்றாள் பிரபாவை பார்த்தவாறு.
“ஆமாம்..
லேசா.. இன்னைக்கு சீக்கிரமே இருட்டுன மாதிரி இருக்கு” என்றான் பிரபா.
“குடை
கூட எடுத்துட்டு வரலடா.. மழை இப்பவே வந்திடும் போல”
“இன்னைக்காவது
வரட்டும். ரெட் அலார்ட், அது இதுன்னு சொன்னங்க போனவாரம்.. வெயில் நம்மளை
சாகடிச்சுது. இப்பவாச்சும் சொன்னதுக்கு ஏதாவது பேயட்டும்” என்றான்.
“ரெட்
அலர்ட்ன்னா என்னடா” என்றாள் நிறைமதி வேகமாக நடந்தவாறே..
“சரியா
தெரியல” என்றவன் சட்டென அலர்ட் ஆனான். பேசிக்கொண்டே வேகமாக நடந்ததால் அவளின்
விரல்கள் இவன் விரல்களில் பட்டதினால் வந்த அலர்ட் அது. அவன் சற்றே விலகி நடக்க, அவளோ
அறிந்தவளாய் அவன் கண்களைப்பார்க்க..
எதிரே பட்டென
மின்னல் மின்னிற்று..
மின்னலை
பார்த்தேவிட்டான் பிரபா. அடுத்த அரை நொடிக்குள் நடந்த சம்பவம்.. அது சம்பவம்
அல்ல.. சரித்திரம்..
குப்பென
கண்கள் இருட்டியது.. அசையாது நின்றான்.. அதே கனம் சில்லென்று அவன் கன்னத்தில் ஏதோ
ஒன்று.. அது.. பிரபாவின் உயிர் வரை உரசியதுபோல.. அது என்ன.. எப்படி.. என
யோசிக்கும் முன்..
இருளுடன்
பயம் முந்திக்கொண்டது. ஐயோ,, மின்னலை பார்த்ததால் பார்வை போயிடுச்சா.. என கண்களை
கசக்கினான்.. விழித்தான்.. எதுவுமே தெரியலையே..
இடிசத்தம்..
கூடவே தூரத்தில் நிறைமதியின் சத்தமும் கேட்டது..
“டேய்..
கரண்ட் போயடுச்சுடா.. இருட்டா இருக்கு.. நா குறுக்கு வழியில் வீட்டுக்கு போறேன்..”
என சொல்லிக்கொண்டே மொபைல் டார்ச் வெளிச்சத்தில் போனாள்.
கண்களை
மீண்டும் கசக்கிவிட்டு பார்த்தான்..
“ச்சே..
மின்னல பார்த்ததால கண்ணு போச்சுன்னு நெனச்சுட்டேன்.. மின்னல் வந்ததும் கரண்ட் போயிருக்கு..
அதான் ஒரே நேரத்தில் இருட்டா போச்சுது..” என்றவன் அனிச்சையாக கன்னத்தை
தொட்டுப்பார்த்தான்..
வேறு
ஏதோ நடந்திருக்கு என யோசித்தவாறே மொபைல் போனை எடுத்து டார்ச் வெளிச்சத்தை தெருவில்
பாய்ச்ச முனைகையில்..
.
“பிளாங்க்.......”
என வாட்ஸ்அப் மெசேஜ்... படித்தான்..
அது
நிறைமதி... படித்தான்..
“முத்தத்திற்கு
அரைநொடி போதாது”
----

கருத்துகள்
கருத்துரையிடுக