முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னத்த சொல்ல

கடல் பார்த்து அழுதவன்.!

கடல் பார்த்து அழுதவன்.! கடல் அவனுக்கு பிடிக்காத ஒன்று. கடல் என்றாலே உப்பு தண்ணீரும் அலைகளின் இரைச்சலும் ஆங்காங்கே மீன்களின் நாற்றமும் நினைவுக்கு வரும். போதாத குறைக்கு சுனாமி வேறு.  எனவே கடல் பொதுவாகவே அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது.! ஆனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு அவன் கடற்கரையில் அமர்ந்திருந்தான்.  அதுவரை பிடிக்காத கடல் அவனை ஏதோ ஒரு விதத்தில் அவனை இன்று வரவழைத்து விட்டது.! கடல் பெரியதுதான். தன்னைப் பிடித்த பிடிக்காத மனிதர்களை விட ரொம்ப பெரியது. வந்து விடுகிறாயா உன்னையும் சேர்த்துக் கொள்கிறேன் என்பது போன்று ஒவ்வொரு அலைகளும் அவனை நோக்கிய வருவதும் பிறகு அவனின் மௌனம் கண்டு ஏமாந்து தலை கவிழ்ந்து செல்வதுமாக இருந்தது.! ஆனாலும் அலைகள் ஓய்ந்தபாடில்லை.! அலைகளின் குணமே அதுதானே.  உன்னோடு வாழ்வதற்கு எங்கேயாவது போய் செத்து விடலாம் என்று அவள் சொன்னதுதான் மீண்டும் மீண்டும் அவன் புத்திக்கு வந்தது.  ஒவ்வொரு அலைகளின் போதும் அவள் சொன்ன வார்த்தைகள் தான் அவனுக்கு நினைவுக்கு வருகிறது.  பிறகு அலைகள் பின்னோக்கி செல்லும்போது அவன் அதை மறக்க நினைக்கிறான் ஆனாலும் வேறு ஒரு அலை அதைவிட பெர...