-சிறு(பேய்?)கதை- ‘அண்ணே, நல்லா இருட்டிடுச்சி, வெரசா போய்ச்செரனும்’ ‘ஆமாடே, நடுவால உள்ள சுடுகாட்ட தாண்டி போயிட்டோம்னா சரி. எழவு, ஊருக்கு போற ரோட்டுலையா சுடுகாட வைப்பானுக, நம்ம ஊரு கிழடுகளுக்கு புத்தி மங்கி கெடந்திருக்கும் போல’ ‘ராத்திரி நேரத்துல எழவு அது இதுன்னு அவச்சொல்லா சொல்லுற, இன்னும் சுடுகாட்ட நாம நெருங்கவே இல்ல, நீவேற, வாயில ‘அபா அபா’ன்னு போட்டுக்கண்ணே’ ‘என்னடா பச்சப்புள்ளகிட்ட சொல்ற மாதிரி இருக்கு, பயம் இல்லாம வாடே’ என்றவனுக்கும் உள்ளூர நடுக்கம் வெகுவாக இருந்தது. .... பின்ன, ‘சாக்கையன்கொள்ளை சுடுகாடுன்னா சும்மாவா’ன்னு ஊரு பெருசுக பேய், ஆவி கதைகளை ஆரம்பிச்சா பலபேருக்கு பீதியில பேதி ஓடிடுமாக்கும். சுத்துப்பட்டு கிராமம் எல்லாம் சாக்கையன்கொள்ளை சுடுகாடுன்னா ஏதோ ‘ஜமீன் கோட்டை’ பட எபெக்டுக்கு நடுங்குவாங்க. எவ்ளோ பெரிய மோடிமஸ்த்தானா இருந்தாலும் சாக்கையன்கொள்ளை எனும்போதே சகஜ நிலை விட்டோடும். அந்த மாவட்டம் முழுவதும் ஆவி, பேய் விசயத்துக்கு இந்த பெயர் மிக பிரபலம். இருவரும் மாட்டு சந்தைக்கு போய்விட்டு, இரவு சினிமா சென்றதால், கடைசி பேருந்தை தவ...