தேர்தலு வரப்போகுது தாண்டவக்கோனே - ஊரு
கரைவேட்டியால் கரையாகுது தாண்டவக்கோனே
கடனில் தத்தளிக்கும் தமிழகத்திலே – தேர்தல்
வந்தாலே நோட்டு வாசம் தாண்டவக்கோனே
மண்ணாப்போன மனுஷனுக்கு தாண்டவக்கோனே - ஓட்டின்
முக்கியத்துவம் தெரியலயே தாண்டவக்கோனே
நாடு நல்லா இருக்கணும்னு நாலு நெனச்சா - காசுபாக்க
நாலாயிரம் அலையுதிங்கே தாண்டவக்கோனே
அஞ்சு வருசத்துகுக்கொருமுறை ஆயிரம்ரூபா –இங்கே
அத்தனையும் அழிச்சிடுத்தே தாண்டவக்கோனே
படிச்சவனும் குடிச்சவனும் ஒன்னு சேர்ந்துதான் –
கட்சி
கலவரத்தில் கன்னமிடுறான் தாண்டவக்கோனே
புத்திசொல்ல வாய்தொறந்தா தாண்டவக்கோனே- பயபுள்ள
கத்தி எடுத்து கழுத்த சீவுறான் தாண்டவக்கோனே
எத்தனையோ சொல்லி சொல்லி மடுத்துபோச்சுதான் –
உலகம்
மொத்தமாயழிஞ்சாலும் திருந்தமாட்டான்
தாண்டவக்கோனே
-
பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக