முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்ல மறந்த வார்த்தைகள்



மனிதன் செய்யும் மடமைகளுக்கு கடவுளை குறைசொல்வது என்பது சரியான புரிதல் அல்ல.

நம்பிக்கை இல்லை என்றால் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிடலாம்.
அல்லது அதற்கு வசைபாடுதலை கேட்க மக்கள் இருக்கிறார்களே.  தாராளமாக வசைபாடுங்கள். கேட்டுகொள்கிறோம். ஏளனம் செய்யுங்கள். அமைதியாய் கவனித்து அப்புறம் கடந்து செல்கிறோம்.

*மாறாக கடவுளை கொச்சையான பதங்களை பயன்படுத்தி பொதுவில் பதிவிடுதலை தவிருங்கள்.*

உங்கள் ஞான கண்களுக்கு புலப்படாத பல உண்டு இந்த உலகில் , அதை நீங்களும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறீர்கள், ஆனாலும் இதுவரை உங்கள் கண்கள் அவைகளை கண்டதேயில்லை.

கடவுள் நம்பிக்கை முட்டாள்தனமாக சிலருக்கு தெரிந்தாலும் கடவுளே இல்லை என்பது பலருக்கும் முட்டாள்தனமாகவே தெரியும் என்பதை சிலருக்கு மனது உணர்த்தினாலும் புத்தி கண்டுகொள்வதில்லை போலும்.

மதமாற்றம் என்பது சரியா தவறா என்பது குறித்து இங்கு கருத்து சொல்ல ஒன்றுமில்லை. எல்லோரும் நல்ல ஞானம் உள்ளவர்களே இக்குழுவில் உள்ளனர்.

ஆனால், நான் வழிபடும் இறைவனை பற்றி, நம் நம்பிக்கை பற்றி, நம் புரிதல் பற்றி மற்றவருக்கும் எடுத்துச்சொல்வது குற்றம் அல்லவே. மக்களை நல்வழிப்படுத்த எத்தனையோ மார்க்கங்கள் இருப்பினும் பெரும்பாலும் எல்லாம் ஓரிறை கொள்கைகளே. அது எந்த மார்கத்தில் தெளிவாய் உள்ளது என்பதை பலர் கூறுவதை கேட்காமல் அறிய இயலாது.

விருப்பம் இல்லையா, ? “இல்லைங்க, எனக்கு வேண்டாம்,” என்று ஒதுங்கிப்போங்க.


அதை விடுத்து
அய்யய்யோ, மதத்தை மாத்துறாங்க, போச்சு போச்சு என அலறும் அளவுக்கு மதமாற்றம் ஒன்னும் ஒரே இரவில் நடக்கும் பணமதிப்பிழப்பு போல செயல் அல்ல.

அப்படி காசுக்கும், பணத்திற்கும், இல்லாமைக்கும், இயலாமைக்கும், மிரட்டலுக்கும் மதமாற்றம் நிகழ்ந்தால் அது ஒரு சடங்கு மட்டுமே. அது தேவையில்லை. ஒதுக்கித்தல்லிவிடலாம். திரும்ப தாய்மதம் மாறிக்கொள்ளலாம். யார் தடுத்தது..?

ஆனால்,

*உண்மை இறைவனை நெருங்க உதவும், உரிமை கொண்டாடும் வழிமுறைகள் அல்லது இறைவனின் வாக்குறுதிகளை பெற்று ஆன்மீக தேடலின் வினைப்பயன் அடைய உதவும் வழிகளை அடைந்த ஒரு ஆன்மா மீண்டும் தன முந்தைய நிலை திரும்புமா என்றால்.. திரும்பாதே.!*

 ஏன் என  எல்லோருக்குமே விடை தெரியும்.! மெய்ப்பொருள் அறிந்த ஆன்மா தன்னிலை உணருமே..!


*அதே சமயம் எதோ தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல மதமாற்றம் நிகழ்கிறது. அது கண்டிக்கத்தக்கது* மதன் மனிதனை பயமுறுத்துமே தவிர இயல்பாய் இருக்க விடாது.

அதே சமயம் தான் அறிந்த இறைவன் பற்றி மற்றவருக்கு சொல்ல இந்த பிரபஞ்சத்தில் தடை ஒன்றும் இல்லை. அப்படி அதை தடுக்க சர்வாதிகார போக்கு இருப்பின் ஒரே இறைவன் அதை உடைத்தெறியும் செயல்களும் நடந்துகொண்டுதானிருக்கும். அதை நிதானித்து அறிய அத்தகையோருக்கு நேரமில்லாமல் இருக்கலாம்.

மதம் மட்டுமே பிடித்த மனிதன் இறைவனை அறிந்திராத மக்களுக்கு ஒப்பாவனே தவிர வேறொன்றுமில்லை.

கடைசியாக,
குறிப்பாக ஒரு வேண்டுகோள்,

கடவுள் பற்றி அலசுங்கள், விவாதியுங்கள், ஒத்துகொள்ளாமல் கூட சிலர் அப்படியே இருங்கள், யாருக்கும் ஒன்றும் இல்லை.! 

ஆனால், மனிதன் செய்யும் செயல்களுக்கு தன்னால் விளங்கிக்கொள்ள இயலாத, அறிய இயலாத கடவுள் பற்றி அவதூறாக, ஏளனம் செய்வது என்பது நம்மை நாமே நிலை மாற்றிகொள்வது போல ஆகிவிடும். இறை நம்பிக்கை உள்ளவருக்கும் அது மிகுந்த மன உளைச்சலை தரும்.

ஆக்கபூர்வமாய் சித்திக்கிறோம் என்று சொல்லி நம் நிலை தாழ்த்திக்கொள்ளவும், மற்றவரை மனமடிய வைக்கவும் ஏன் முயலவேண்டும்.!

நிலையறிவோம்.!

அன்பே சிவம்..!
வாழ்க வளமுடன்.. வளர்க வையகம்.!

-     பூங்குன்றன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வறுமையின் நிறம் மஞ்சள்

அது 1990 களின் ஒரு பங்குனி மாதம்... வள்ளி திருமணம் நாடகம் முடிந்த அதிகாலை.. திருவிழா கூட்டம் மெல்ல கலைந்து தம் தம் வீடுகளை நோக்கி நகர்கின்றனர்..  மாறன் தன் அம்மா கரத்தை பிடித்தவாறு அரை தூக்கத்தில் நகர்கிறான்.. சிறுமி பார்வதியை அம்மா இடுப்பில் சுமந்தபடி கோவில் குளம் நோக்கி செல்கின்றனர்.. பாசி பிடித்துள்ளதா இல்லையா எனும் குழப்பம் தரும் ஒரு வித பச்சை நிறத்தில்   இருந்த கோவில் குளத்து நீரில் முகம் கழுவினாள் அம்மா. மாறன் நீரில் சற்று இறங்கி சட்டென காலை பின்னுக்கு எடுத்துவிட்டான். நீர் சில்லிட்டிருக்கும் போல. கரையேறி கோவில் அருகே கடக்கையில்.. “அம்மா.. பலூனு” என்றாள் பார்வதி. திருவிழா முடிந்து மூட்டை கட்டும் பலூன் வியாபாரி அந்த சத்தம் கேட்டு திரும்புகிறார்.. “மூணு ரூவா தாயி, பெரிய்ய பலூனு.. வாங்கிக்கோ..” என்றார்.. இருப்பதே ஐந்து ரூபாய். அவ்வளவுதான் என்பது அம்மாவுக்குத்தான் தெரியும். பார்வதிக்கு சொல்லி புரிய வைக்கும் வயது இல்லை..  மாறனிடம் திருவிழாவில் எதுவுமே கேட்கக்கூடாது என்று சொல்லியே கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவனுக்கும் அது புரியு...

நிதானித்தால் நீர்த்துப்போகச் செய்யலாம்

“ பிரச்சினைகளால் நேரிடையாக பாதிக்கபடாதவரை பிரச்சினைகளே இல்லை என்று பொருள் கொள்ளுதல் ஆபத்து ” -      யாரோ.. வீட்டுக்கு போக ஐந்து பாதைகள் இருந்தன... . அதில் இலகுவான பாதையை எப்போதும் தெரிந்தெடுத்து பயணித்தான் டிங்கு.! திடீரென ஒருநாள் அந்த பாதையில் திமோ எனும் ஒருவன் நின்றுகொண்டு டிங்குவை போக விடாமல் இடையூறு செய்தான். இது தினமும் தொடரவே டிங்கு அடுத்த பாதையை தெரிந்தெடுத்து வீட்டுக்கு போகலானான் தினமும். இப்போது செல்லும் இரண்டாவது பாதையில் அன்று யாரோ முட்களை நிரப்பியிருந்தனர். டிங்குவும் தினமும் சுத்தம் செய்து வெறுத்துப்போய் இதை யார் செய்கிறார்கள் என புரியாமல் தவித்தான். முட்கள் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கால்களை பதம் பார்த்தது. உடனே டிங்கு மூன்றாவது பாதையை தெரிவு செய்தான். மூன்றாவது பாதை சற்று கூடுதல் கடினமான ஒன்று. ஆங்காங்கே ஆசுவாசப்படுதிக்கொள்ள மரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. ஆனால் அதிலும் வினை வந்தது. சில நாட்களிலேயே ஒவ்வொரு மரமாய் வெட்டப்பட்டு நிழலுக்கு ஒதுங்க கூட வழி இல்லாமல் போனது.   டிங்கு வெறுப்படைந்தான். இப்படிய...

மெய்ப்பொருள் காண்பது அரிது.!

இனி காலம் செல்லாது மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.! நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இணையம் என்பது மிக ஆச்சர்யமான ஒன்றாய் இருந்தது. அவ்வளவு தகவல்கள் பொதிந்து கிடந்தால், அதெல்லாம் கட்டற்று ஒரு கணினியினுள்ளே கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? தோண்டத் தோண்ட தகவலின் அமுதசுரபி புதையலாய். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அருமை என்னவென்று, ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்து ஆய்வு செய்யும் ஓர் மாணவருக்குத் தெரியும், சிக்கலான கணக்கீடுகளுக்கு விடை தேடித்திரியும் மூளைக்கு தெரியும், ஓவியத்தின் பரிணாமங்களை காணத்துடிக்கும் கண்களுக்குத் தெரியும், பார்த்திராத மூலிகைகளை படங்களுடன் பக்குவமாய் கண்ட நவீன சித்தர்களுக்குத் தெரியும், நாசாவின் பிரபஞ்சம் சார்ந்த ஆய்வுகளை அள்ளிப்பருகும் அகண்ட ஆய்வாளர்களுக்குத் தெரியும், நலிந்த மக்களின் வாழ்வியலை தேடும் நல்லார்களுக்குத் தெரியும், நயவஞ்சகத்தில் இருந்து தப்பிக்க சட்டத்தை நாடுபவர்களுக்குத் தெரியும். கூடவே அறிவியல், ஆன்மவியல், உளவியல், உணர்வியல், தொல்லியல், சொல்லியல், இயற்கை, செயற்கை, கூட்டல், கழித்தல், ஆய்ந்தது, அறிந்தது, கற்றத...