முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீர்ப்புகள் திருத்தப்படலாம்.!

[இன்று....]   “ ....... காரணங்கள் எற்புடையதாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெற கூடாது என்று இந்த கோர்ட் கருதுகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்ட மாயத்துரைக்கு மூன்று மாத சிறை தண்டனையும் கூடுதலாக போட்டோகிராபரின் மருத்துவ செலவிற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாயை மாயத்துரை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கிறேன். கூடவே இதுபோன்ற செயல்களில் இயல்புக்கு அதிகமாக செயல்பட வேண்டாம் என போட்டோகிராபர்களுக்கு இந்த கோர்ட் ஆலோசனை செய்கிறது. ” நீதிபதியின் வாகன ஓட்டுனர், பக்க வாசல் கதவருகே நின்று இந்த தீர்ப்பை கேட்டது மட்டுமல்ல, இந்த தீர்ப்பை வாசித்தபின் நீதிபதி விட்ட பெருமூச்சையும் கவனிக்க தவறவில்லை. ............ [மூன்று மாதங்களுக்கு முன்..] “ சொல்லுண்ணே... ” என்றான் மாயத்துரை. “ டேய்.. புரோக்கர் ஒரு பொண்ணு போட்டோவும் ஜாதகமும் கொடுத்துட்டு போயிருக்கார், பொருத்தம் இருக்கு. பொண்ணும் பாக்க லட்சணமா இருக்குடா............ ” “ இதோ பாருண்ணே, நான் வெளிநாட்டில் இருக்கேன். நீங்க என்னடான்னா பொண்ணு பாக்குறேன்னு ரெண்டு வருசமா இழுத்துகிட்டே இருக்கீங்க. இதே மாதிரிதான் போனதடவ ...