உனைப்போல இங்கு நானில்லை
உனக்காக இங்கு நானில்லை
எனைக்காண இங்கு வந்தாலும்
இயல்பாக எங்கும் நீயில்லை
புதியன நிதம் தேடியலையும்
உன்னருகிலோ வாடிய உயிரும்
அதை காணாது
விட்டபோதும்
புதுவுயிர் தேடுதல் தகுமோ
இயற்கை காற்றையும் வடிகட்டியிழுத்தாய்
தெளிநீரிலும் தினம் தீதுகலந்தாய்
கானக நடுவிலும்
கட்டிடங்களமைத்து
இயல்புக்குமீறி பதார்த்தங்கள் சமைத்து
ஆயுள்குறைத்து
அழியும் நீயோ
உன் சாபத்திலெம்மை சேர்க்கவந்தாயோ
விந்தையாய் கண்டாய் மின்சுடுகாடு
- உன்
புலனுக்கெட்டாது எங்கள் புத்துயிர்க்காடு
-பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக