மண்ணும் மலையும் எங்கள்
இனமே
கண்ணும் கருத்தாய்
காத்துவந்தோமே
அல்லும் பகலும் அயர
உழைத்தோமே
நெல்லும் பயிரும் உயிர்
தழைத்திடுமே
வேண்டாத விலங்கினம்
புகுந்த நிலம்போல்
கூண்டாக புகுந்த
கலப்பின புல்லுருவிகளால்
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டுவந்த இனம்
மாண்டு போகும் நிலை
வந்ததேயதினால்
யானை கொண்டு நெற்
போரடித்தொமே
தங்கம் தவழ அணிந்து
மகிந்தோமே
காயும் பயிற்கொய்ய
அமரும் கோழியை
விரட்ட வீசியது தங்க
மாலைதானே
எங்கே மறைந்தது அந்த
பெருஞ்செல்வம்
இன்றும் திருபாதே போனதோ
அந்நாளும்
மாண்டார் திரும்பி
வந்தாலும் இங்கு
என்னிலை கண்டு
திகைப்பாரே அங்கு
காய்ந்தது பயிரல்ல
வறுமையின் வயிறு
வெந்தது சோற்றுக்காக
வெண்ணிற பாதம்
முக்கிய மூட்டைகள்
ஏற்றிய தலையும்
மூத்தகுடிக்கு என்றாவது
தன்னிலை புரியும்
அன்றோடு விடியும்..!
அல்லல்கள் அகலும்..!!
- *பூங்குன்றன்*

கருத்துகள்
கருத்துரையிடுக