புத்தகங்களை நோக்கி
ஓட முற்படும் ஒவ்வொரு முறையும்
எஸ்எம்எஸ் ரிங்டோன்
காலை தடுக்கி விடுகிறது..!
நகர்ந்தாவது
நல்ல நூலை கையில் எடுக்க
கை நீட்டும் போது
உள்ளங்கையோடு செல்போன் ஒட்டிக்கொள்கிறது..!!
படுக்கும் போதாவது
இரண்டு பக்கங்களை புரட்ட நினைத்தால்
கட்டு கட்டாக தூக்கத்தை கொட்டாவியும் கொண்டு வருகிறது,
தூங்க கண் மூடும்
கண நேரத்தில் செல்போன்
கண் திறக்கிறது..!!
பேய் பிசாசு மீது இல்லாத நம்பிக்கை இப்போது வருகிறது..!
மனம் ஒரு குரங்கு.!
செல்போன் ஒரு பிசாசு.!!
~பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக