கற்றது கைய்யளவு எம்
சான்றோர் உரைத்தது
கற்று பெற்றது
அகந்தையானால் வீணுற்றதது
தலைக்கனம் ஏறி வாழ்வின்
வழி வலியோடாயின்
இலக்கணம் மாறி தலை
தள்ளுவண்டியிலாகும்..
ஒருமனமாகா சில திருமண
வாழ்வுமே
எதிர்காலத்தின் கனவுகள்
இருளினில் கரையுமே
மண வாழ்வது வரமே
என்றுணராவிடில்
மன பாரமும் தலைக்கேறி
தள்ளுவண்டியிலாகுமே..
அகத்திற்கு ஒளியும்
தேகத்திற்கு உணவும்
உளத்திற்கு உணர்வும்
ஊருக்கு நீரும்
கொடாத அரசும்
குடிகேடாக்கும் குடியும்
கண்டு நொந்தவன் தலையது
தள்ளுவண்டியிலாகுமே..
உடையது வெள்ளை தம் உணர்வும்
கூட
நடையது நேர்மை நன் நாணயம்
தேட
தெருக்கடையது திறந்தால்
கப்பம் கேட்டிட
நேர்மையின் கூடவே மாண்ட
தலையது......
தள்ளுவண்டியிலாகுமே..!
தள்ளுவண்டியிலாகுமே..!!
தள்ளுவண்டியிலாகுமே..!!
-பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக