குருவே
மனதிற்கும் புத்திக்கும் என்ன வித்யாசம், இரண்டுமே கண்ணில் படுவதில்லை, நான்
எப்படி அதை பகுத்து அறிவது.?
இங்கே
வா.. இப்படி என் அருகில் உட்கார்
இதோ
வந்துவிட்டேன் குருவே.. சொல்லுங்கள்
“பளார்”
இப்பொழுது
நான் உன்னை அறைந்துவிட்டேன். நீ என்ன நினைக்கிறாய்?
எனக்கு
குழப்பமாய் இருக்கிறது. கூடவே சற்று.........
கோபமாகவும்
இருக்கிறது.. அப்படித்தானே?
ஆமாம்
குருவே.! மன்னிக்கணும் என்னை. தாங்கள் செயல் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் கருதியே
இருக்கும் என்பதை நான் அறிவேன்.
நல்லது.!
என்னைத் தவிர வேறு யாரேனும் உன்னை அறைந்திருந்தால் நீ இவ்வளவு அமைதலாய் இருப்பது
கடினம். ஏனெனில் உன் புத்தி உடனடியாய் செயல்பட்டு எதிர்வினையாற்றி இருக்கும். அந்த
புத்தியின் அவசரத்தால் மனம் சொல்லும் செய்தியை கவனிக்க தவறியிருப்பாய்.
ஓ..
உண்மைதான்..
ஆமாம்..
ஆனால் இப்போதோ, உன் புத்தி தந்த கோபத்தையும் மீறி உன் மனம் உன்னிடம் உணர்த்தியதை
வைத்து அமைதலாய் இதற்கு ஏதோ ஒரு காரணம் உண்டு என கவனித்து அமைதலாய் இருக்கிறாய்.
எங்கு
இந்த வேறுபாடு நிகழ்கிறது, ஏன் அப்படி குருவே..?
அவசர
புத்தி என கேள்விப்பட்டு இருப்பாய் அல்லவா..?
ஆமாம்..
அவ்வப்போது மக்கள் பயன்படுத்தும் சொல்லாடல்தானே குருவே..
சரி..
அலைபாயும் மனமுண்டு. ஆனால் அவசர மனம் என கேள்விப்பட்டு இருக்கிறாயா..?
இல்லை..!
குருவே ஏன் இப்படி.?
புத்தியின்
கட்டுப்பாட்டில் விழுவது சுலபம். ஏனெனில் புத்தி ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்குமானது.
மனதின் கட்டுப்பாட்டில் அல்லது கட்டுப்படுத்துவது மிக அரிது.
ஏனெனில்
மனது இந்த பிரபஞ்சத்திற்கானது..!
-மு.பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக