"விமானத்தில் ஏறி பறந்தேன்
விலகுவது
தூரங்கள் மட்டுமல்ல
- என் உறவுகளும்தான்..
பள்ளிப்பருவத்தில் வீட்டில்
தந்த படிக்காசும்
நண்பனின் காக்கை
கடி கல்கோனாவும்
- தந்த சந்தோசங்கள்
இங்கு
ஐஸ் கிரீம் பார்லரில்
நான்
உணரவில்லை...
விநாடிகளை
கணக்கிட்டு பேசி உறவாடும்
ஒவொரு நொடியும் நாம் அடைவோம் தொலைபேசி தந்த
- உறவு பரினாமத்தை..
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் ?
இங்குதான் சறுக்குகிறது - இன்னும்
எத்தனையோ
குரங்குகள் இருக்கின்றன மாறாமல்..
விட்டுவிடுவோம் ..
ஆராயவேண்டம் ..
அவைகள் அவைகளாகவே இருக்கட்டும்
ஏனெனில்..
அங்கும்
வேண்டாம் இந்த
பணதிற்க்கான
ஒரு பயணம் "
கருத்துகள்
கருத்துரையிடுக